அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் அரசுக்கு எதிராக இதுவரை இல்லாத வகையில் மிகவும் தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரு பகீர் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
உலகமே உற்று நோக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) உடனடியாகத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள டிரம்ப், தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பக்கத்தில் ஈரானை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
வரும் செவ்வாய்க்கிழமையை “மின் நிலைய நாள்” மற்றும் “பாலங்கள் நாள்” என்று குறிப்பிட்டுள்ள அவர், அன்றைய தினம் ஈரானின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
“செவ்வாய்க்கிழமை ஈரானில் ஒரு அதிரடியான மாற்றம் இருக்கும், இதுவரை உலகம் பார்த்திராத ஒரு தாக்குதலாக அது அமையும்” என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால், ஆத்திரத்தின் உச்சியில் இருக்கும் டிரம்ப், ஈரானின் உள்கட்டமைப்புகளைச் சிதைக்கத் திட்டமிட்டுள்ளார்.
அவரது இந்த ஆக்ரோஷமான பேச்சும், பயன்படுத்திய வார்த்தைகளும் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், வரும் செவ்வாய்க்கிழமை ஈரானின் கதி என்னவாகப்போகிறது என்ற அச்சத்தில் உலக நாடுகள் உறைந்து போயுள்ளன.
