வங்க கடலில் தற்போது நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் டிசம்பர் 5ஆம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மயிலாடு, சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளையும் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் புயல் காரணமாக ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதியில் மைக்கு என்பது கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.