
திருச்செந்தூர் மற்றும் சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் செந்தூர் விரைவு ரயில் சேவை டிசம்பர் 31ம் தேதி வரை திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தண்டவாளம் மற்றும் ரயில்வே பாலங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன. இதனால் ரயில் நிலையங்களில் தேங்கிய நீர் முழுவதும் அகற்றப்பட்ட நிலையில் வெள்ளத்தால் சேதம் அடைந்த தண்டவாளத்தை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
எனவே டிசம்பர் 31ஆம் தேதி வரை திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் செந்தூர் விரைவு ரயில் திருநெல்வேலி இருந்து மட்டும் புறப்பட்டு செல்லும் எனவும் மறுமார்க்கமாக சென்னை எழும்பூர் மற்றும் திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் ரயில் திருநெல்வேலி உடன் நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.