கானா நாட்டைச் சேர்ந்த எபோ நோவா என்ற தீர்க்கதரிசி, டிசம்பர் 25, 2025 அன்று உலகம் அழியப் போவதாகக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதிகப்படியான மழை மற்றும் பெருவெள்ளத்தால் உலகம் அழியும் என்றும், மக்களைக் காப்பாற்ற பைபிளில் கூறப்பட்டுள்ளதைப் போல எட்டுப் பேழைகளை (கப்பல்களை) உருவாக்கக் கடவுள் தனக்குப் பணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதனை நம்பிய ஏராளமான மக்கள், அழிவிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள அவர் இருக்கும் இடத்தை நோக்கிப் பயணம் செய்யத் தொடங்கியதோடு, பேழைகளைக் கட்ட அவருக்குப் பண உதவியும் செய்து வந்தனர். இருப்பினும், உலகம் அழியும் எனக் குறிப்பிடப்பட்ட அதே நாளில் எபோ நோவா திடீரெனத் தனது கருத்தை மாற்றிக்கொண்டு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
BREAKING 🚨: Ebo Noah says God has answered our prayers, the rains and floods has been postponed
The reasons being that…
1/2 https://t.co/cQtqusxyBr pic.twitter.com/ryWEg2Rr1d— WithAlvin 🇬🇭 (@withAlvin__) December 24, 2025
“>
இது தான் தொடர்ந்து கடவுளிடம் மன்றாடிப் பிரார்த்தனை செய்ததன் காரணமாக, கடவுள் தனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உலக அழிவைத் தற்போது தள்ளிப்போட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனால் மழை மற்றும் பெருவெள்ள அபாயம் தற்காலிகமாக நீங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ள நிலையில், இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் கேலியையும் கிளப்பியுள்ளது.
