சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ‘டோகேஷ் பாய்’ என்று அன்போடு அழைக்கப்படும் நாய் ஒன்று, தெருவோரத்தில் ஒரு பெண்ணின் அருகில் அமைதியாக அமர்ந்து பக்திப் பாடல் கேட்டு மகிழும் காட்சிகள் இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது.

அந்தப் பெண் பக்திப் பாடல்களைப் பாடிக் கொண்டிருக்க, அதன் அருகில் அமர்ந்திருக்கும் இந்த நாய், எவ்வித சலனமும் இன்றி ஆன்மீகத்தில் மூழ்கிப் போனது போல் காட்சியளிக்கிறது. இந்த அழகிய தருணத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாகப் பதிவு செய்து பகிர, அது தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Mostly India 🇮🇳 (@mostlyindia.in)

“>

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அந்த நாயின் அமைதியையும் பக்தியையும் கண்டு வியந்து போயுள்ளனர். “சத்சங்கத்தில் நாய்க்குட்டி மூழ்கியுள்ளது” என்ற தலைப்பில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, விலங்குகளுக்கும் இறை உணர்வு அல்லது இசையின் மீது ஈர்ப்பு இருக்கும் என்பதற்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.

இந்நிலையில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான பிணைப்பைத் தாண்டி, ஒரு தெய்வீகமான சூழலில் இந்த நாய் காட்டும் நிதானம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.