ரயில் டிக்கெட் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, பெண் எழுத்தர் ஒருவருக்கும் பயணிக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த மூன்று நாட்களாக டிக்கெட் பெறுவதற்காக அலைக்கழிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டிய அந்தப் பயணி, ரயில்வே அலுவலகத்தில் நடந்த அந்த வாக்குவாதத்தைப் படம்பிடிக்க முயன்றார்.

அப்போது, அந்தப் பெண் ஊழியர் தடுத்ததோடு, ஓடிபி மற்றும் பணம் செலுத்துவதில் சிக்கல் இருப்பதாகக் கூறி டிக்கெட் வழங்க மறுத்ததாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் பொதுச் சேவைகளில் நிலவும் மெத்தனப் போக்கையும், பொறுப்பற்ற தன்மையையும் வெளிச்சம் போட்டுக்காட்டுவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“>

இந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அரசு ஊழியர்களின் இத்தகைய செயல்பாடுகள் பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைப்பதாகப் பயனர்கள் பலரும் தங்கள் ஆதங்கத்தைப் பகிர்ந்துள்ளனர். சிறிய நிர்வாகக் குளறுபடிகள் கூட சாதாரண குடிமகனை எவ்வளவு தூரம் அலைக்கழிக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.