இந்திய அஞ்சல் துறை நாடு முழுவதும் உள்ள அஞ்சல் வட்டங்களில் காலியாக உள்ள 28,740 கிராமின் டக் சேவக், கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களை நிரப்பத் திட்டமிட்டுள்ளது. இதில் தமிழக வட்டத்தில் மட்டும் சுமார் 2,009 காலிப்பணியிடங்கள் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வேலைவாய்ப்பின் சிறப்பம்சமே, இதற்கு எந்தவிதமான எழுத்துத் தேர்வும் கிடையாது என்பதுதான். விண்ணப்பதாரர்கள் தங்களது 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு நேரடியாகப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களைப் பயின்றிருப்பது அவசியமாகும். வயது வரம்பைப் பொறுத்தவரை, 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜனவரி 31, 2026 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தகுதியுள்ள நபர்கள் அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான சந்தேகத்திற்குரிய இணைப்பு அகற்றப்பட்டது மூலம் பிப்ரவரி 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்குப் பணி இடத்தைப் பொறுத்து ஊதியம் மற்றும் பிற சலுகைகள் வழங்கப்படும்.
