
டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் பொது தேர்வுகான கட்டணத்தையும், ஒரு முறை பதிவிற்கான கட்டணத்தையும் தேர்வர்கள் எளிமையாக யுபிஐ மூலம் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதத்தில் 7757 தேர்வர்கள் பல்வேறு அரசு பணியிடங்களுக்கு தேர்வாகியுள்ளனர். மேலும் அரசின் கோட்பாடுகளை நிலைநிறுத்தும் வகையில் 441 பட்டியலின மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான காலிபணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில், தேர்வானவர்களின் நலம் கருதியும் ,தேர்வு செயல்முறையை துரிதப்படுத்தும் வகையில் ஒரு முறை பதிவிற்கான கட்டணம் மற்றும் தேர்வு கட்டணத்தை தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் யுபிஐ மூலம் செலுத்த வழிவகுக்கப்பட்டுள்ளது.எனவே தேர்வர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி குறிப்பிட்டுள்ளது.