தமிழகத்தில் டாஸ்மாக் மது கடைகளை திடீரென்று மூடிவிட முடியாது என்ற தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், மதுக்கடைகளை நடத்தை யாருக்கும் விருப்பமில்லை. படிப்படியாக தான் குறைக்க முடியும். தமிழகத்தில் இதுவரை 500 கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனை அனைவரும் எதார்த்தமான கண்ணோட்டத்தில் அணுக வேண்டும். அதேசமயம் குடிக்கு அடிமையானவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.