
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் மொத்தம் 4829 அரசு மதுபான கடைகள் இயங்குகின்றது. இங்குள்ள 2000 கடைகளில் மட்டுமே தற்போது பார்கள் இயங்கி வரும் நிலையில் மீதமுள்ள கடைகளில் அரசு பார்கள் இல்லை. இதனால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறப்படும் நிலையில் இதனை கருத்தில் கொண்டு சுமார் 2000 பார்கள் அமைக்க இ- டெண்டர் கோரப்பட்டுள்ளது.
அதன்படி இந்த மாதம் இறுதிக்குள் டெண்டர் இறுதி செய்யப்பட்டு அதிகபட்ச தொகைக்கு யார் டெண்டர் கேட்டுள்ளார்களோ அவர்களுக்கு டெண்டர் அளிக்கப்படும் எனவும் நவம்பர் மாதம் முதல் பார்கள் முழுமையாக இயங்கும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.