ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர்.  இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் “தேர்தல் மன்னன்” பத்மராஜனுக்கு டயர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1988இல் முதல் முறையாக தேர்தலில் களமிறங்கிய பத்மராஜன் ஈரோடு கிழக்கு தொகுதியில் 233வது முறையாக போட்டியிடுகிறார். அதிக தேர்தலில் போட்டியிட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பது தான் அவருடைய ஆசை. மேலும், தனக்கு மக்கள் ஓட்டு போட்டு வெற்றிபெற வைக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.