ஐபிஎல் 18 வது சீசன் ஆனது இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் கோலாகலமாக நடந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு சீசனிலும் புதிய விதிகளை கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் இந்த முறையும் புதிய விதிகளை கொண்டுள்ளது. ஆனால் இந்த வருடம் புதிதாக கலை நிகழ்ச்சி நடத்துவதில் ஒரு புதிய முயற்சியை ஐபிஎல் நிர்வாகம் கொண்டுள்ளது. ஒவ்வொரு சீசனிலும் தொடக்க ஆட்டம் நடைபெறும் மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஆனால் இந்த முறை 12 மைதானங்களில் கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் 30ம் தேதி ராஜஸ்தான்- சென்னை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி கவுக்காத்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு முன்பாக பாலிவுட் நட்சத்திரம் சாரா அலிகான் சிறப்பு கலை நிகழ்ச்சி நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.