தமிழகத்தின்  தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக  திகழ்ந்தவர் ஜெயலலிதா. இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த தினம். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, அழகு, அறிவு, கம்பீரம், ஆளுமை கொண்டவர் செல்வி. ஜெயலலிதா. அவரைப்போல் இன்னொரு மனிதரை பார்க்கவே முடியாது. ஒரு காலத்தில் எனக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே மனஸ்தாபம் இருந்தது.

இதனால் அவருக்கு எதிராகவே நான் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் என்னுடைய அழைப்பை ஏற்று என் மகளின் திருமணத்திற்கு ஜெயலலிதா வந்து திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்தார். ஜெயலலிதா நாமம் என்றும் வாழ்க என்று கூறினார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.