2024-25 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை இந்த மாதம் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் ஒரு மாத கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என்றும் இது போன்ற விஷயங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாள் என்பதால் அதன் பிறகு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். வருமானம் 5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் அபராதம் ஆயிரம் ரூபாய் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.