இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன. இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ தனது மலிவான 5g திட்டத்தை 349 ரூபாய்க்கு வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடி ஆகும் மற்றும் 56 ஜிபி மொத்த டேட்டாவையும் வழங்குகின்றது. பயணங்கள் ஒரு நாளைக்கு 2ஜிபி அதிவேக தரவை அனுபவிக்க முடியும்.
ஏர்டெல்லின் மலிவான 5G திட்டத்தின் விலை சற்று அதிகமாக 379 ரூபாய் ஆகும். இந்த திட்டம் ஒரு மாதம் செல்லுபடி ஆகும் எனவும் 263 ஜிபி டேட்டாவை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நாளைக்கு தோராயமாக 8.5 ஜிபி டேட்டாவை வழங்குகின்றது. இந்த இரண்டு திட்டத்திலும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படும்.
