இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு சலுகையை அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு எதிர்பார்த்து ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பலன்களை வழங்கும். ஆனால் இந்த சலுகை தற்போது 2999 ரூபாய் ப்ரீபெய்டு திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த திட்டமானது 365 நாட்கள் வேலிடிட்டி உடன் தினமும் 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகின்றது. புத்தாண்டு சலுகையின் போது ரீசார்ஜ் செய்தால் மேலும் 24 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.