திமுக ஆட்சியில் மின் கட்டணம், வரி விதிப்பு மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது, வரிச்சுமையால் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மின்கட்டணம் பலமுறை உயர்த்தப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு முதலில் 52 சதவீதமும், பின்னர் ஆண்டுக்கு 5 சதவீதம் என மொத்தம் 67 சதவீதம் வரை உயர்த்திவிட்டனர். வணிக நிறுவனங்களுக்கு ‘பீக் ஹவர்’ என்ற பெயரில் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.வீட்டு வரி 100 சதவீதம் வரையும், கடைகளுக்கான வரி 150 சதவீதம் வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.

இது போதாதென்று குப்பைக்கும் வரி போட்டு மக்கள் மீது பெரும் சுமையை இந்த அரசு சுமத்தியுள்ளது. இத்தகைய மக்கள் விரோத அரசு நமக்குத் தேவையா? கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு அதிமுக ஆட்சியில் நிலவிய விலைகளுக்கும் தற்போதைய நிலவரத்திற்கும் உள்ள வேறுபாட்டை அவர் பட்டியலிட்டார்.

மேலும் முதல்வர் ஸ்டாலின் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் நடைப்பயிற்சி போவது, டீ குடிப்பது, பளு தூக்குவது போன்றவைகளை செய்து படம்பிடித்து காட்டுகிறார். ஐபிஎல் கிரிக்கெட் பார்த்து அது குறித்து கருத்து கேட்கிறார். மேலும் நகரம் பற்றிய பொது அதை பற்றி கவலைப்படாமல் முதல்வர் ஸ்டாலின் ஐபிஎல் கிரிக்கெட் பார்த்து அதை பற்றி கருத்து சொல்கிறார் என்றார்.