தற்போது உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ளது. சமவெளி பகுதிகளில் வெயில் சுட்டரித்து வருவதால் இதமான காலநிலையை அனுபவிப்பதற்காக வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இது போன்ற இடங்களுக்கு வந்து மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கின்றனர். இதில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட மலை ரயிலில் பயணம் செய்வதற்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சுற்றுலா பயணிகளுக்காக உதகை – கேத்தி இடையே இன்று முதல் “ஜாய் ரைடு” மலை ரயில் சேவை கோடை சீசனை முன்னிட்டு  இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் மலை ரயிலில், முதல் வகுப்பில் பயணிக்க ஒருவருக்கு ரூ.630 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோடை விடுமுறையால் உதகைக்கு மக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.