தளபதி விஜய் இப்போது டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது.

இப்படத்தையடுத்து விஜய் தன் 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். இந்நிலையில் ஜப்பான் சர்வதேச திரைப்பட விழாவில் சென்ற 2021ம் வருடத்தின் சிறந்த நடிகர் விருது நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரிலீஸ் ஆன மாஸ்டர் படத்துக்காக விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது.