அரசுப் பள்ளிகளில் சிறப்பு தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் சிறப்பு பள்ளி தூய்மை பணியின் செயல்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு பள்ளிகளிலும் ஜனவரி 8 முதல் 10ஆம் தேதி வரை சிறப்பு பள்ளி தூய்மை பணி செயல்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.  ஜனவரி 5ஆம் தேதி நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் சிறப்பு பள்ளி தூய்மை பணி செயல்பாடு குறித்து விவாதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் சிறப்பு தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தின் கீழ் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு இந்த தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த திட்டமானது வரும் ஜனவரி 8, 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல், நெகிழி பயன்பாட்டை தவிர்த்தல் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பள்ளிக்கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளார். குறிப்பாக வரக்கூடிய 8,9,10 ஆகிய மூன்று நாட்களும் பள்ளி வளாகத்திற்கு உள்ளேயும், பள்ளியை சுற்றிலும் தூய்மை பணியினை மேற்கொள்ள வேண்டும். செடி, கொடிகள், புதர்கள் போன்றவை இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும். வலுவிழந்த நிலையில் காணப்படும் மரங்கள், மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் பள்ளி வளாகத்தின் உள்ளே மாணவர்கள் செல்லக்கூடிய இடங்களில் அந்த இடங்கள் தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற பல்வேறு அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்கள். அதே போன்று மாணவர்கள் மரக் கன்றுகளை நட்டு வளர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நெகிழி பயன்பாட்டுக்கு பதிலாக மாற்றாக சில பொருட்களை பயன்படுத்துவதற்காக அறிவுறுத்தல்கள் போன்றவை சிறப்பு தூய்மை பணியாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வரும் 5ஆம் தேதி பள்ளி அளவில் நடக்கக்கூடிய பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திலும் இது குறித்து விவாதங்கள் நடத்தி வரக்கூடிய 8.9 10 ஆகிய தேதிகளில் அனைத்து அரசு பள்ளிகளிலும் இந்த சிறப்பு தூய்மை பணிகளை மேற்கொள்ள தேவையான முன் நடவடிக்கைகளும் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமாரகுருபரன் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்..