தஞ்சை மாவட்டத்திற்கு வருகின்ற ஜனவரி 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 30ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 10ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்களுக்கு பொருந்தாது.