நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிறுத்தை ஒன்று குன்னூர் மலையடிவார பகுதியில் சுற்றி திரிந்த நிலையில் திடீரென எடப்பள்ளி இந்திரா நகர் குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பூனை ஒன்றை துரத்திச் சென்ற சிறுத்தை.

ஒரு வீட்டின் வளாகத்திற்குள் புகுந்து அங்கிருந்த வளர்ப்பு நாயை கவ்வி வனப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த காட்சிகள் அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை பார்த்த மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். இந்திரா நகர் பகுதியில் சுற்றி தெரியும் சிறுத்தையைப் பிடித்து பணப்பகுதியில் விட வேண்டும் என்று வனத்துறையினருக்கு கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.