2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தைத் தயார்படுத்தி வரும் அக்கட்சியின் தலைவர் விஜய், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தனது அடுத்தகட்ட மக்கள் சந்திப்புப் பயணத்தைச் சேலம் அல்லது தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.

‘ஜனநாயகன்’ படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் அண்மையில் சிபிஐ அனுப்பிய சம்மன் போன்ற நெருக்கடிகளுக்கு மத்தியில், கட்சியின் தேர்தல் சின்னத்தை அறிமுகப்படுத்தும் பணிகளில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.

கடந்த மாதம் ஈரோட்டில் கே.ஏ. செங்கோட்டையன் முன்னிலையில் நடைபெற்ற பிரமாண்ட மக்கள் சந்திப்பைத் தொடர்ந்து, கொங்கு மண்டலத்தில் மீண்டும் ஒரு மாபெரும் எழுச்சி மாநாட்டை நடத்தி, தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள அதிகாரப்பூர்வ சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கத் தவெக நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.

விஜய்யின் இந்தப் புதிய அரசியல் நகர்வு மற்றும் சின்னம் குறித்த அறிவிப்பு அக்கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.