நைஜர் நாட்டின் அதிபர் முகமது பாசும் திடீரென ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அந்நாட்டு ஆட்சி ராணுவத்தினர் கைவசம் சென்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட முயன்றனர். ஆனால் அவர்களை சமாளிக்க ஆட்சிக்கால்ப்புயற்சியின் பின்னணியாக செயல்பட்ட வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

நைஜர் நாட்டின் ராணுவத்தின் இத்தகைய செயலுக்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது இதுகுறித்து ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ  கூறுகையில், ராணுவத்தினர் ஜனநாயகத்திற்கு இடையூறு விளைவிக்கும் செயல்களை நிறுத்தியாக வேண்டும். நைஜர் அதிபர் முகமது பாசுமை இப்போதே விடுதலை செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார். நைஜரில் இதற்கு முன்பும் நான்கு முறை ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.