தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், தூத்துக்குடி தொகுதியில் விஜய்யின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத்  களம் காண்கிறார்.

தனது சொந்த மண்ணில் போட்டியிடுவது குறித்து உற்சாகமாகப் பேசிய ஸ்ரீநாத், “நான் பிறந்த மண், என்னுடைய மண்ணிலேயே போட்டியிடுகிறேன் என்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. தூத்துக்குடி மக்கள் நீண்ட காலமாக ஒரு மாற்றத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாற்றத்தை தவெக நிச்சயம் கொண்டு வரும்” எனத் தெரிவித்தார்.

“>

 

விஜய்யின் சிறுவயது நண்பரான ஸ்ரீநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடி தொகுதி நட்சத்திரத் தொகுதியாக மாறியுள்ளதுடன், தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.