பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ரொஹுவா கிராமத்தில், சொந்த சித்தியுடன் காதல் வயப்பட்டு உல்லாசமாக இருந்த வாலிபரை உறவினர்கள் கையும் களவுமாகப் பிடித்து, இருவருக்கும் கட்டாயத் திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த கோலு மஹ்தோ என்ற வாலிபர், தனது சொந்த தாயின் தங்கை (சித்தி) மம்தா குமாரியை காதலித்து வந்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக இவர்களது ரகசிய காதல் நீடித்து வந்த நிலையில், சம்பவத்தன்று கோலு மஹ்தோ திருட்டுத்தனமாக மம்தாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, மம்தாவின் தந்தையும், கோலுவின் தாத்தாவுமான ஜக்லால் மஹ்தோ எதிர்பாராத விதமாக அறைக்குள் சென்றபோது, இருவரும் அரைகுறை ஆடைகளுடன் நெருக்கமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தாத்தாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும், உறவினர்களும் அங்கு திரண்டனர். உறவை கொச்சைப்படுத்திய கோபத்தில், கோபமடைந்த கிராம மக்கள் இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர், இதுகுறித்து வாலிபரிடம் கேட்டபோது, தான் தனது சித்தியை உயிருக்குயிராகக் காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்வதாகவும் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, கிராம மக்கள் முன்னிலையில் மம்தாவின் நெற்றியில் கோலுவை குங்குமம் வைக்கச் சொல்லி இருவருக்கும் அங்கேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது. வாலிபர் குங்குமம் வைக்கும்போது, அந்தப் பெண் அழுதுகொண்டே இருக்கும் இந்த வினோத திருமண வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி, கடுமையான விவாதப் பொருளாக மாறியுள்ளது.