கோவாவில் ஏர்பிஎன்பி தங்குமிடம் நடத்தும் பெண் உரிமையாளர் ஒருவர், தனது இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டை வாடகைக்கு எடுத்த சுற்றுலாப் பயணிகள் எவ்வளவு மோசமான, அசுத்தமான நிலையில் விட்டுச் சென்றுள்ளனர் என்பதைக் காட்டும் வீடியோ ஒன்றைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
நான்கு நாட்கள் தங்கியிருந்த அந்த விருந்தினர்கள், வீட்டை ஒரு குப்பைத் தொட்டி போல மாற்றிவிட்டுச் சென்றுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிப் பலரது கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
“Garbage Dump”: Goa Airbnb Host Alleges Guests Left Property In Filthy Condition https://t.co/vMdPJQJTCN
“>
அந்த வீடியோவில் வீடு முழுவதும் குப்பைகளும், அசுத்தமான பொருட்களும் சிதறிக்கிடப்பது தெளிவாகத் தெரிகிறது. இதைப் பார்த்த சமூக ஊடகப் பயனர்கள் தங்களது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். தற்காலத்தில் தங்கும் இடங்களை வாடகைக்கு எடுப்பவர்கள், அதைத் தங்கள் சொந்த வீடு போலப் பொறுப்புடன் நடத்த வேண்டும் என்றும், சிலரிடம் பொது ஒழுக்கம் மற்றும் நாகரிகம் குறைவாக இருப்பதே இதுபோன்ற செயல்களுக்குக் காரணம் என்றும் நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுபோன்ற பொறுப்பற்ற வாடிக்கையாளர்களுக்கு எதிராக ஏர்பிஎன்பி தளம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர். சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு எதிர்மறையான விமர்சனங்களை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர்கள் இனிமேல் வேறு எந்த வீட்டையும் வாடகைக்கு எடுக்க முடியாதவாறு தளத்திலிருந்து முடக்க வேண்டும் என்றும், வீட்டை அசுத்தம் செய்பவர்களுக்குத் துப்புரவுக் கட்டணம், கடுமையான அபராதம் மற்றும் அதிக முன்பணம் வாங்கும் முறையை உரிமையாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
