6,200 கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரர் சொந்தமாக செல்போன் கூட வைத்திருப்பதில்லை என சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆனால் அது தான் உண்மை. 86 வயதான ஸ்ரீராம் குழுமத்தின் நிறுவனர் R.தியாகராஜன் தனது சொத்துக்கள் அனைத்தையும் தன் நிறுவன ஊழியர்களுக்கு அள்ளிக்கொடுத்தவர்.  வர்த்தக மற்றும் தொழில்துறை துறையில் இவரது பங்களிப்பிற்காக 2013ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்ம பூசண் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஒரு  விவசாயக் குடும்பத்தில் வளர்ந்த தியாகராஜன், 37 வயதில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தை நிறுவினார். 1974 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்ட ஸ்ரீராம் குழுமத்தின் மதிப்பு தற்போது $750 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. இதில் மொத்தம் 108,000 பேர் பணியாற்றுகின்றனர்.  காப்பீட்டு வணிகத்தில் முடிசூடாத மன்னராக விளங்கிய அவர் போனை தேவையில்லாத ஒன்றாக கருதுவதாக ப்ளூம்பெர்க் தகவல் தெரிவித்துள்ளது