இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. தற்போது இந்தியாவில் சைபர் கிரைம் குற்றவாளிகள் தினம் தினம் புதிய மோசடியை செய்து வருகிறார்கள். சமீபத்தில் ஒரு புதிய வகை மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்படி இந்திய கஸ்டமர்ஸ் என்ற பெயரில் போன் செய்து நுகர்வோரிடம் பணம் பறிப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் வெளிநாட்டில் இருந்து உங்களுக்கு விலை உயர்ந்த பரிசு வந்துள்ளது இதனால் தங்களின் வங்கி கணக்கிற்கு கொஞ்சம் பணத்தை மாற்ற சொல்லி மோசடி செய்கிறார்கள் என்று கஷ்டம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே இது போன்ற அழைப்புகள் வந்தால் எடுக்க வேண்டாம் என மத்திய நிதி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.