வங்கி கணக்குகளில் Minimum Balance இல்லாதவர்களிடமிருந்து35,000 கோடியை அபராதமாக  வசூலித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் வங்கி கணக்குகளில் போதிய இருப்பு நிலையை பராமரிக்கவில்லை என்றால் வாடிக்கையாளர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகை அபராதமாக விதிக்கப்படும். இந்த அபராத தொகை வங்கிகளை பொறுத்து மாறுபட்டு வருகிறது.

அதன்படி 2018-2023 வரையில்  குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைக்காத காரணத்தினால் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து 35,000 கோடியை வசூலித்ததாக மத்திய அரசு மக்களவையில் தகவல் தெரிவித்துள்ளது. அதே போல ATM பண பரிவர்த்தனை கட்டணமாக 8,289 கோடியும் SMS சேவைகளுக்காக 6,254 கோடியும்  பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் (IDBI, ICICI, HDFC, Axis) வசூலித்துள்ளன என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.