ஒடிசா மாநிலம் கினோஜ்கர் மாவட்டம் நிலிஜிஹரன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திர சோரன். இவருக்கும் இவரது உறவினர்களுக்கும் இடையே நீண்டகாலமாக நிலத்தகராறு இருந்து வந்த நிலையில், நேற்று மீண்டும் இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. இதில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற உறவினர்கள், மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜிதேந்திர சோரன், அவரது மனைவி மற்றும் மகளை கண்மூடித்தனமாக சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை அதிரடியாக கைது செய்தனர்; மேலும் தப்பியோடிய மற்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
