தோனி எனக்கு மிகவும் பிடித்த பேட்டிங் பார்ட்னர் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்..

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் தனக்கு பிடித்த பேட்டிங் பார்ட்னர் குறித்த தகவலை தெரிவித்துள்ளார். தனக்கு பிடித்த பேட்டிங் பார்ட்னர் யார் என்று கூறினார். கம்பீரின் கூற்றுப்படி, சேவாக் தனக்கு மிகவும் பிடித்தவராக இருப்பார் என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் அது அவ்வாறு இல்லை. எம்எஸ் தோனி எனக்கு மிகவும் பிடித்த பேட்டிங் பார்ட்னர், அவருடன் விளையாடியது சிறப்பாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

2011 உலகக் கோப்பை வெற்றிக்கு எம்எஸ் தோனிக்கு மட்டும் கிரெடிட் கொடுப்பது சரியல்ல என கவுதம் கம்பீர் பலமுறை கூறியுள்ளார். அவரைப் பொறுத்தவரை, அந்த உலகக் கோப்பை வெற்றியில் பல வீரர்கள் பங்களித்துள்ளனர். இதனால், தோனியை கடுமையாக விமர்சிப்பவர் கெளதம் கம்பீர் என்று பலர் நம்புகிறார்கள்.  இருந்தாலும் கௌதம் கம்பீர் எம்எஸ் தோனியை அதிகம் புகழ்ந்துள்ளார். தோனியை தனக்கு பிடித்த பேட்டிங் பார்ட்னர் என அவர் வர்ணித்துள்ளார். 

கம்பீர் கூறியதாவது, எனக்கு பிடித்த பேட்டிங் பார்ட்னர் எம்எஸ் தோனி. அது வீரேந்திர சேவாக் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் நான் உண்மையில் தோனியுடன் பேட்டிங் செய்வதை ரசித்தேன். வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அவருடன் பேட்டிங் செய்வதை ரசித்தேன். நாங்கள் பல பெரிய பார்ட்னர்ஷிப்களை செய்துள்ளோம் என்றார்.

2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா கோப்பையை வெல்ல கெளதம் கம்பீரின் பெரும் பங்களிப்பு இருந்தது.. 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் விக்கெட்டுகளை வெகு விரைவில் இழந்தது. இதையடுத்து விராட் கோலியும், கவுதம் கம்பீரும் களமிறங்கினர். இருவரும் 3வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்தனர். விராட் கோலி ஆட்டமிழந்த பிறகு, கெளதம் கம்பீர், தோனியுடன் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் சேர்த்தனர். இந்த பார்ட்னர்ஷிப் வெற்றிக்கு காரணம்..