2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு, ஐசிசி சமீபத்திய ஒருநாள் தரவரிசையை அறிவித்துள்ளது.

2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு, ஐசிசி சமீபத்திய ஒருநாள் தரவரிசையை அறிவித்துள்ளது. இந்த தரவரிசையில் இந்தியாவின் இளம் பேட்ஸ்மேன் சுப்மன் கில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். உலகக் கோப்பையில் நட்சத்திர பேட்ஸ்மேன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்ற நிலையில், விராட் கோலி 4வது இடத்தில் இருந்து 3வது இடத்தைப் பிடித்துள்ளார். புதன்கிழமை வெளியிடப்பட்ட தரவரிசையில், முதல் 4 இடங்களில் 3 இந்திய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

விராட் மற்றும் ரோஹித் ஆகியோர் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டனர். விராட் 4வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கும், ரோஹித் 5வது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். பாகிஸ்தானின் பாபர் அசாம் 2வது இடத்தில் நீடிக்கிறார். விராட் உலகக் கோப்பையில் 3 சதங்கள் உட்பட மொத்தம் 765 ரன்கள் எடுத்தார்.

ஐசிசி தரவரிசையில் முதல் 5 பேட்ஸ்மேன்கள் :

சுப்மன் கில் – 826 புள்ளிகள்

பாபர் அசாம்- 824 புள்ளிகள்

விராட் கோலி- 791 புள்ளிகள்

ரோஹித் சர்மா- 769 புள்ளிகள்

குயின்டன் டி காக்- 760 புள்ளிகள்

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தென்னாப்பிரிக்காவின் கேசவ் மகராஜ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் முகமது சிராஜ் ஒரு இடத்தை இழந்து இரண்டாமிடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் 3வது இடத்தில் இருந்து 2வது இடத்திற்கு முன்னேறினார். உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் முகமது ஷமி மீண்டும் டாப்-10ல் இடம் பிடித்துள்ளார். இவர் 10வது இடம் பிடித்துள்ளார். பந்துவீச்சில் முதல் 10 இடங்களில் 4 இந்திய பந்துவீச்சாளர்கள் உள்ளனர். ஷமி, சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா 4வது இடத்திலும், குல்தீப் யாதவ் 6வது இடத்திலும் உள்ளனர்.

ஐசிசி தரவரிசையில் முதல் 5 பந்துவீச்சாளர்கள் :

கேசவ் மகாராஜ்- 741 புள்ளிகள் 

ஜோஷ் ஹேசில்வுட்- 703 புள்ளிகள்

முகமது சிராஜ்- 669 புள்ளிகள் 

ஜஸ்பிரித் பும்ரா- 685 புள்ளிகள்

ஆடம் ஜம்பா- 675 புள்ளிகள்

வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். முகமது நபி இரண்டாமிடம், சிக்கந்தர் ராசா மூன்றாமிடம். ரஷித் கான் 4வது இடத்தில் நீடிக்கிறார். முதல் 10 இடங்களில் உள்ள ஒரே இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா மட்டுமே. ஜடேஜா 9வது இடத்தில் இருந்து 10வது இடத்திற்கு சென்றுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்தது. நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கேப்டன் ரோகித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி ஒரு தோல்வி கூட இல்லாமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வி இந்திய ரசிகர்களின் இதயத்தை உடைத்தது.