31 காய்கள், இரண்டு ஆட்டக்காரர்கள், கருப்பு மற்றும் வெள்ளை வழி சதுரங்கள் வழியே நகர்ந்து ராஜாவை வீழ்த்துபவர் வெற்றியாளர். சதுரங்க விளையாட்டை பற்றி தெரியாதவர்களுக்கு இப்படி சிம்பிளாக இதை விளக்க முடியும். ஆனால், இந்த அளவிற்கு எளிமையான விளையாட்டு இல்லை. இதை விளையாட விரைவான யோசனை, சட்டென முடிவெடுக்கும் திறன், ஆக்கச்சிந்தனை, கூர்மையான நினைவு திறன் உள்ளிட்டவை தேவை.

செஸ் விளையாட்டினை விளையாடுவதால் நமது மூளைக்கு சிறந்த பயிற்சி கிடைக்கின்றது. உடல் சீராக இயங்குவதற்கு எப்படி உடற்பயிற்சி முக்கியமாகின்றதோ, அதுபோல் மூளை சீராக செயற்படுவதற்கும் பயிற்சி அவசியமாகின்றது. செஸ் விளையாடுபவர்கள், தாங்கள் எங்கோ, எப்போதோ கேட்ட விஷயங்களை கூட நினைவில் வைத்து இருப்பார்கள். அதை தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திக்கொள்வர். இது அவர்களுக்கே தெரியாமல் அவர்களுக்குள் ஏற்படும் மாற்றமாகும்.