தங்கம் என்றாலே எப்பொழுதும் அனைவருக்குமே அதிகமான மோகம் இருக்கும். அது வெறும் ஆடம்பர பொருள் மட்டுமல்லாமல் நல்ல முதலீடு பொருளாகவும் உள்ளது. தங்கத்தின் விலை ஆனது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருப்பதால் தங்கம் ஒரு சிறந்த முதலீட்டு பொருளாக பார்க்கப்படுகிறது. எதிலாவது முதலீடு செய்ய நினைக்கும் பெரும்பாலானவர்கள் முதல் விருப்பமாக தங்கம் தான் உள்ளது. அந்த நகை உண்மையானதா? இல்லையா? என்ற சந்தேகம் நிறைய பேருக்கு ஏற்படும். அதே போல சிலருக்கு தங்கத்தை அடையாளம் காண்பதிலும் சிக்கல் இருக்கிறது .

மேலும் 24கேரட் தங்கமா என்பதை அடையாளம் காண வேண்டும். ஆனால் அதை பெரும்பாலானவருக்கு அடையாளம் காண தெரிவதில்லை. எனவே தங்கம் வாங்குவதற்கு முன்பாக இதை மனதில் கொள்ள வேண்டும். தங்கம் வாங்கும்போது கடைக்காரரை  நம்பி கண்மூடித்தனமாக தங்கம் வாங்கினால் ஏமாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது. மலிவான விலையில் கிடைக்கும் தங்கம் உண்மையில் தரம் உயர்ந்ததாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. குறைந்த விலைக்கு தங்கம் கிடைத்தால் அதன் தூய்மை என்ன என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும் .

அந்த தங்கம் தூய்மையானதா என்றும் கொடுக்கும் விலைக்கு மதிப்பு உள்ளதா? இல்லையா? என்பதையும் பார்க்க வேண்டும். 24 கேரட் தங்கம் கலப்படமில்லாத சுத்தமான தங்கம் என்று நிறைய பேருக்கு தெரியும். அது முற்றிலும் தூய்மையானது என்பதால் அதை வைத்து நகை செய்ய முடியாது. அதாவது 24 கேரட் தங்கத்தில் நகை செய்ய முடியாது. நகைகளில் எழுதப்பட்டுள்ள குறியீட்டை நீங்கள் கவனிக்க வேண்டும். 0.916 என்று எழுதப்பட்டிருந்தா அந்த நகை 22 கேரட் என்று அர்த்தம். 0.833 என்று எழுதப்பட்டிருந்தால் அந்த தங்கத்தின் மதிப்பு 20 கேரட் ஆகும். அதேசமயம், 0.750 என்று இருந்தால் அது 18 கேரட் ஆகும். இதன் மூலம் தங்கம் எவ்வளவு தூய்மையானது என்று கண்டுபிடிக்கலாம்.