இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். அப்படி செல்போன் பயன்படுத்துபவர்கள் அனைவரும் தங்களுடைய ஸ்மார்ட் போனை அலங்கரிக்க back cover பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய ரசனைக்கு ஏற்றது போல இதனை பயன்படுத்தி வரும் நிலையில் இதில் பல தீமைகளும் உள்ளது. ஸ்மார்ட்போனின் பாதுகாப்பாக நாம் பயன்படுத்தக்கூடிய பேக் கவரில் பல தீமைகள் உள்ளன. அதாவது பேக் கவரை பயன்படுத்தும் போது உங்களுடைய ஸ்மார்ட் போன் மிக விரைவாக சூடாகும். மொபைல் போன் சூடாகி விட்டால் இன்னும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மொபைலை சார்ஜ் செய்யும்போது ஒரு சில பேக் கவர்களால் தாமதம் ஆகிவிடும். காரணம் மொபைல் சூடாக இருப்பதால்தான்.

அதனைப் போலவே தரமான பேக் கவர்களை பயன்படுத்தாமல் இருந்தால் அது பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்க கூடும். எப்போதும் மொபைல் போன் கைகளிலேயே இருப்பதால் பாக்டீரியாக்களால் உடல் நல பாதிப்பும் ஏற்படும். அதுவே ஒரு சில பேட் கவர்களில் காந்தம் பயன்படுத்தப்படுவதால் GPS சிக்னல்களும் பாதிக்கப்படும். இறுதியாக ஸ்மார்ட்போன்களே கவர்ந்திழுக்கும் நிறத்துடன் அறிமுகம் செய்யப்படுகின்றது. பேக் கவர் போட்டு அதனை மறைப்பதால் ஸ்மார்ட்போனின் அழகும் கெட்டுப் போய்விடும். எனவே சார்ஜ் போடும் போது, மொபைலை பயன்படுத்தும் போது பேக் அவர்களை கழற்றி விட்டு பயன்படுத்தினால் நல்லது.