சென்னையில் செல்ல பிராணிகளை வளர்க்க உரிமம் பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது உரிமம் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி www.chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். அதற்கு முதலில் பெருநகர சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் சென்று இணையதள சேவைகள் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு அதில் செல்லப் பிராணிகள் உரிமம் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து புதிய பயனர் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து உங்களுடைய விவரங்களை உள்ளிட வேண்டும்.

அதன் பிறகு தொலைபேசி நம்பர் மற்றும் நான்கு இலக்க நம்பரை உள்ளிட்டு புதிய செல்லப்பிராணிகள் உரிமம் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு உரிமையாளரின் புகைப்படம், செல்ல பிராணியின் புகைப்படம், முகவரி, ஒரு வருடத்திற்கான வெறிநாய் கடி தடுப்பூசி போடப்பட்டதற்கான புகைப்படம் பதிவு செய்ய வேண்டும்‌‌. இதை மண்டல கால்நடை உதவி மருத்துவர் அங்கீகரித்த பிறகு பதிவு செய்யப்பட்ட தொலைபேசி நம்பருக்கு பணம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி வரும். அதன் பிறகு சென்னை மாநகராட்சி இணையதள பக்கத்தில் இணைப்பு முகவரி பக்கத்திற்கு சென்று ரூ‌ .50 கட்டணமாக செலுத்த வேண்டும். அதன்பிறகு செல்லப்பிராணிகள் உரிமம் பதிவிறக்கம் செய்வதற்கான ஆப்ஷன் உருவாகும். மேலும் அதன் மூலம் உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.