வேலூர் மாவட்டத்தில் நடந்த விழா ஒன்றில் அமைச்சர் துரைமுருகன் பேசிய வீடியோவானது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அவர் பேசிய சில விஷயங்கள் சர்ச்சையாகி உள்ளது. இதனை பாஜகவை சேர்ந்த எஸ் ஆர் சேகர் தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், உங்க அம்மாவிடம் போய் பஸ்சுக்கு கேட்காதே. நீ பசங்களோட சினிமாவுக்கு போனீன்னா அங்க பணம் கேட்காதே. ஒரு செல்போன் வாங்கி வைத்துக்கொள்.

நைசாக பேசு, என்ன வேணும்னாலும் பண்ணு என மாணவிகளுக்கு ரூ.1000 கொடுக்கிறோம் என அமைச்சர் துரைமுருகன் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும், செப்.15 முதல் பெண்களுக்கு ரூ.1000 கொடுக்க போகிறோம் எனவும் தெரிவித்தார். இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.