தூத்துக்குடியில் திருமண நிகழ்ச்சியில் சாப்பாடு சாப்பிடும் இடத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் கலங்க வைத்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்துவிட்டு அவர்களை கெடுத்து தவறான வழிக்கு செல்வதற்கு பெற்றோர்களை காரணமாக உள்ளனர். அதாவது குழந்தைகள் சாப்பிடும் போது, தூங்கும் போது மற்றும் அழுதால் உடனே குழந்தைகளுக்கு செல்போனை கொடுத்து அவர்களின் அழுகையை அடக்குகின்றனர். ஆனால் பின்னாளில் இதன் விளைவு பெரிதாக இருக்கும் என்பதை அப்போது அவர்கள் உணர்வதில்லை.

தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியில் பாட்டி ஒருவர் தன்னுடைய பேரனுடன் சாப்பிட அமர்ந்துள்ளார். இரண்டு இலைகளிலும் சாப்பாடு உள்ள நிலையில் பேரன் தானாக சாப்பிடாமல் பாட்டி ஊட்டி விட அவன் சாப்பிடுகிறான். ஆனால் கையில் வைத்திருந்த செல்போனை மட்டும் கீழே வைக்காமல் சாப்பிட தொடர்ந்து பாட்டியும் ஊட்டிக்கொண்டே இருக்கிறார். இது குறித்து அருகில் இருந்தவர்கள் கேட்க அதற்கு பாட்டி, தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவரால் சாப்பிடும்போது செல்போன் இல்லை என்றால் சாப்பிட முடியாது என கூறியுள்ளார். இது நம்ப முடியவில்லை என்றாலும் இதுதான் உண்மை என்று கூறப்படுகின்றது. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.