
தேனி மாவட்டம் போடி பகுதியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 12 ஆம் தேதி மது போதையில் கீழே தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து மோகனின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சந்தேக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் மோகனின் மார்பு எலும்பு உடைந்திருப்பது தெரியவந்தது.
இதனால் விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறையினர் அவருடைய மனைவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது மோகன் மது போதைக்கு அடிமையானதால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு செய்து வந்ததோடு சம்பவ நாளில் செல்போனை விற்று மது அருந்தியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் அவருடைய மனைவி கட்டையால் அடித்து அவரை கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது. மேலும் காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து மோகனின் மனைவியை கைது செய்துள்ளனர்.