அமைச்சர் செந்தில் பாலாஜி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சபதம் எடுக்கும் போது கொஞ்சம் யோசித்து எடுக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் செருப்பு அணிய முடியாது எனக் கூறி அண்ணாமலை உள்ளூரிலேயே விலை போகாத ஆடு. அவர் நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததாக அமைச்சர் விமர்சித்தார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது கூறியதாவது, செப்பல் தான் போடாமல் இருக்கிறேன். வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கிட்டு மோசடி செய்து ஜெயிலுக்கு போகவில்லை. ஜெயிலுக்கு செல்வதும், மீண்டும் அமைச்சர் பதவியில் அமர்வதும் தான் தவறு. இது பற்றி உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேடை போட்டு பாஜகவை திட்டுவது தான் திமுகவின் வேலையாக உள்ளது. அனைத்துக் கட்சி கூட்டம் எதற்கு? என்னவென்று தெரியாமலேயே எப்படி அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியும்? தொகுதி மறு சீரமைப்பில் தமிழகத்தில் ஒரு தொகுதி கூட குறையாது. அதில் கூட திமுக அரசியல் செய்கிறது. மக்கள் பிரச்சனை பற்றி திமுகவினருக்கு கவலை இல்லை. மத்திய அரசு மீனவர் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கையில் புதிய அதிபர் வந்த பிறகுதான் கைது நடவடிக்கை அதிகமாகி உள்ளது. இதுபற்றி வெளியுறவுத் துறை அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பார். விரைவில் தீர்வு எட்டப்படும் என கூறியுள்ளார்.