நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து, அவர் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள், ஊடகங்களைச் சந்திக்காமல் ஒருவரால் எப்படி சிறந்த தலைவராக உருவெடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பி வருகின்றன.
குறிப்பாக, முக்கியப் பிரச்சினைகளின் போது கூட செய்தியாளர்களைத் தவிர்த்துவிட்டு விஜய் செல்வது அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், மூத்த செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே இதற்கு ஆதரவாக ஒரு கருத்தைப் பகிர்ந்துள்ளார். பிரதமர் மோடி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் செய்தியாளர் சந்திப்புகளை அதிகம் நடத்தாமலேயே மக்களின் நம்பிக்கையைப் பெற்று வெற்றி பெற்றதை அவர் சுட்டிக்காட்டினார்.
தினமும் பேட்டியளிக்கும் தலைவர்கள் எல்லாம் பெரிய அளவில் வென்றுவிடவில்லை என்றும், மக்களிடம் வாக்கு பெறுவதற்கும் செய்தியாளர்களைச் சந்திப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறி விஜய்க்கு எதிரான விமர்சனங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
