தமிழக வெற்றி கழக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் சென்னையில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றுள்ளது. அதில் கேக் வெட்டி பெண்களுக்கு இலவசமாக புடவை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அவர் நிகழ்ச்சியின் போது தூங்கி வழிந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அதனை பார்த்த நெட்டிசன்கள் சொந்த கட்சி நிகழ்ச்சியிலேயே இப்படியா தூங்குவது என கலாய்த்து வருகின்றனர்.