
அஸ்பார்டேம், சுக்ரலோஸ் மற்றும் சாகரின் போன்ற செயற்கை இனிப்பூட்டி கலந்த உணவுகளை சாப்பிட வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இவை டைப் 2 நீரிழிவு, இதய நோய் மற்றும் உடல் பருமன் ஆகிய அபாயத்தை அதிகரிக்கின்றன. உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயமும் உண்டு. அண்மையில் பஞ்சாபில் அதிக அளவில் செயற்கை இனி பூட்டி சேர்க்கப்பட்ட கேக்கை தின்ற சிறுமி உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது.