ஆந்திர மாநிலத்தில் உள்ள குப்பம் என்ற இடத்தில் ஒரு வயதான பெண்மணியை மின்கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சித்தூர் மாவட்டம் தம்மிகனிபள்ளி கிராமத்தில் ஒரு நிலத்தகராறு ஏற்பட்ட நிலையில் ஆதிரத்தில் ஒரு வயதான பெண்மணியை மின்கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர். இது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தொகுதியாகும்.

அந்த வயதான பெண்மணி தெலுங்கில் ஏதேதோ பேசி அழுது புலம்புவதை வீடியோவில் காணலாம். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோவை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு ஆளும் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் சிரிஷா என்ற ஒரு 29 வயது பெண் 80 ஆயிரம் ரூபாய் கடனை திரும்ப செலுத்தாததால் அவரை மரத்தில் கட்டி வைத்து பொதுவெளியில் அவமானப்படுத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இதே போன்று மீண்டும் ஒரு வயதான பெண்ணை  கட்டி வைத்து அவமானப்படுத்தி உள்ளனர். முன்னதாக சிரிஷா என்ற பெண்ணின் கணவர் கடனை செலுத்தாததால் அந்தப் பெண்ணை அவரது குழந்தைகள் கண்முன்னே மரத்தில் கட்டி வைத்த அவமானப்படுத்தினர். மேலும் இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.