தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது தலைவர் 171 திரைப்படத்தை இயக்கி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த லியோ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் பைட் கிளப் என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நிலையில் தற்போது தான் தயாரிக்கும் இரண்டாவது படம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு பென்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இந்த படத்தை ரெமோ மற்றும் சுல்தான் போன்ற படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். மேலும் இந்த அறிவிப்பை போஸ்டர் வெளியிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.