தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் சுந்தர்சி இயக்கத்தில் அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3 ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‌ அரண்மனை 3 படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி அரண்மனை 4 படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சுந்தர்சி நடித்துள்ள நிலையில், நடிகைகள் தமன்னா, ராசி கண்ணா மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று படத்தின் அச்சச்சோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளனர். அதோடு அரண்மனை 4 ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர். மேலும் தற்போது அச்சச்சோ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.