நாட்டில் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்படும் நிலையில் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த விழாவின்போது சிறந்த சேவைக்கான குடியரசு தலைவரின் காவல் விருது வழங்கப்படும். இந்த வருடம் சிறந்த சேவைக்கான குடியரசு தலைவரின் காவல் விருது பெறுபவர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் 93 காவலர்கள் பதக்கம் பெறுவதற்கு தேர்வாகியுள்ளனர்.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த சென்னை ஐஜி தேன்மொழி, செங்கல்பட்டு உதவி கண்காணிப்பாளர் பொன் ராமு, அரியலூர் உதவி கண்காணிப்பாளர் ரவி சேகரன் ஆகிய 3 பேருக்கும் விருது வழங்கப்பட இருக்கிறது. மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த காவலர்கள் பதக்கத்தை பெறுவதற்கு தமிழகத்தில் இருந்து 21 காவலர்கள் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.