கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் அருகே இருக்கும் பெரியார் நகர் பகுதியில் மோகனசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விஜயம் என்டர் பிரைஸ் என்ற பெயரில் செப்டிக் டேங்க் லாரி மூலம் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் சௌரிபாளையம் பகுதியில் இருக்கும் அஸ்வினி என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அந்தப் பணியில் மோகன சுந்தரம், அவருடன் வந்த தொழிலாளர்களான குணா, ராமு ஆகியோர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது விஷவாயு வெளியேறியதால் மூன்று பேரும் மயக்கம் அடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே மோகன சுந்தரம் உயிரிழந்தார். மற்ற இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.