
சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் குமாரவேல் (43) என்பவர் வசித்து வருகிறார். இவர் பைக் டாக்சி ஓட்டுனராக வேலை பார்க்கிறார். இவர் சம்பவ நாட்டில் மெரினா கலங்கரை விளக்கம் பின்புறம் உள்ள மணல் பரப்பில் படுத்து துங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த ஒருவர் தன்னை போலீஸ் என்று கூறியுள்ளார். அதன்பின் குமாரவேலை மிரட்டி அவரிடம் இருந்த ரூ.8500 ரொக்க பணம், கிரெடிட் கார்டு, ஆதார், டெபிட் கார்டு மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துவிட்டு சென்றுவிட்டார்.
இது தொடர்பாக குமாரவேல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் படி மெரினா குற்றப் பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் மோசடி செய்தது விக்னேஷ் (26) என்பது தெரிய வந்தது. மேலும் இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இருக்கும் நிலையில் அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.